இறந்து விட்டதாக கருதப்பட்டவர் உயிருடன் திரும்பி வந்த அதிசயம்

Written by vinni   // October 18, 2013   //

bike_man_001.w245இறந்து விட்டதாக கருதப்பட்ட நபர் உயிருடன் மீண்டு வந்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்தியாவின் சென்னையை சேர்ந்த பரக்கத்துல்லா(வயது 74), தனது மனைவி பத்ருன்னிஷாவுடன் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா சென்றார்.

அங்கு, ஹஜ்ஜின் முதல் நாளன்று மக்கள் கூட்டத்தில் பரக்கத்துல்லா காணாமல் போய்விட்டார்.

இதனால் தவித்துப் போன அவரது மனைவி பத்ருன்னிஷா இது குறித்து அங்குள்ள அதிகாரிகளிடமும், பொலிசாரிடமும் முறையிட்டார்.

மக்கா பகுதி முழுவதும் தேடிப் பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே அவர் மரணமடைந்து இருக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

இத்தகவல் சென்னையிலுள்ள அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டதால், அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.

இந்நிலையில் சில தினங்கள் கழித்து மக்காவில் உள்ள மன்னர் அப்துல்லா மருத்துவமனையின் திவிர சிகிச்சைப் பிரிவில் பரக்கத்துல்லாஹ் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ஹஜ்ஜின் முக்கிய தினமான அரஃபா தினத்தன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பரக்கத்துல்லாவை மன்னர் அப்துல்லா மருத்துவமனை மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ் மூலம் அரஃபா மைதானத்திற்கு கொண்டு சென்று அவரது ஹஜ் கடமையை பூர்த்தி செய்தனர்


Similar posts

Comments are closed.