இங்கிலாந்தில் 3500 பள்ளிகள் மூடப்பட்டது

Written by vinni   // October 18, 2013   //

schoolgirls_450x300இங்கிலாந்தில் ஆசிரியர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஊதியம், ஓய்வூதியம், பணி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மேலும் ஆசிரியர்கள் தொடர்பான விதிமுறைகளில் அரசு மாற்றம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து லண்டன், கம்பிரியா உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 3500 பள்ளிகளுக்கும் மேல் இன்று மூடப்பட்டுள்ளது.

இதனால் தங்களின் வேலைகளும், குழந்தைகளின் கல்வியும் பாதிப்பதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.