கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு

Written by vinni   // October 18, 2013   //

maveerar-thuyilidamகிளிநொச்சி, கரைச்சி பிரதேசத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மாவீரர் துயிலும் இல்லத்தை இன்று வெள்ளிக்கிழமை துப்பரவு செய்யவிருப்பதாக கிடைத்த தகவல்களையடுத்தே சுமார் 200 க்கும் மேற்பட்ட பொலிஸார் அங்கு குழுமியிருப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

கரைச்சி பிரதேசத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்ய வேண்டுமென கரைச்சி பிரதேச சபையில் நேற்று வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதன்பிரகாரம் கரைச்சி பிரதேச சபை ஊழியர்கள் மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்யும் பணியில் இன்று ஈடுபடவிருந்ததாக தெரியவந்துள்ளதையடுத்தே பொலிஸார் அங்கு குழுமியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பரவு பணியில் யாரும் ஈடுபடவேண்டாமெனவும் அவ்வாறு ஈடுபட்டால் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அவர்களை கைது செய்வோம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Similar posts

Comments are closed.