அமெரிக்க அமைச்சரான இந்தியப் பெண்

Written by vinni   // October 18, 2013   //

americaminister_002இந்திய வம்சாவளியை சேர்ந்த நிஷா தேசாய் பிஸ்வாலை அமெரிக்காவின் துணை அமைச்சராக நியமிப்பதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் துணை அமைச்சர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண்ணை கடந்த யூலை மாதம் அதிபர் ஒபாமா பரிந்துரை செய்தார்.

இதுதொடர்பாக செனட் சபையின் வெளியுறவு குழுவில் விவாதிக்கப்பட்டதை அடுத்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிஷாவிற்கு ஆதரவு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான துணை அமைச்சராக நிஷா தேசாய் நியமிக்கப்படுவதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் விரைவில் நிஷா முறைப்படி பதவியேற்க உள்ளார்.

இந்தப் பதவிக்கு முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.