தீக்குளித்தது ஏன்? சினேகா பரபரப்பு வாக்குமூலம்

Written by vinni   // October 18, 2013   //

sneha_student_002பள்ளியில் தீக்குளித்தது ஏன் என்று 6ம் வகுப்பு மாணவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி சினேகா(11).

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு பள்ளியில் உள்ள பாத்ரூமில் உடலில் கெரசின் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த சினேகாவுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலச்சந்திரன், தாசில்தார் தங்கவேலு மற்றும் முதன்மை கல்வி அலுவலர் சாந்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேற்று சினோகா அளித்த வாக்குமூலத்தில், 5ம் வகுப்பு வரை மெட்ரிகுலேசனில் படித்தேன். தற்போது 6ம் வகுப்பில் அரசு பள்ளியில் சேர்த்து விட்டனர். என் தோழிகள் வெவ்வேறு பள்ளிகளில் படிக்கின்றனர்.

இந்த பள்ளியில் என்னுடன் படிக்கவந்த தோழிகளை வேறு பிரிவிற்கு மாற்றிவிட்டதால் எனக்கு வருத்தம் ஏற்பட்டது. இதனால் ஆரம்பம் முதலே இந்த பள்ளியில் படிக்க பிடிக்கவில்லை.

மேலும் காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் ரேங்க் கார்டில் தந்தை கையெழுத்து போட மறுத்து விட்டார் என்றும் இது உறுத்தியதால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டேன் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பக்ரீத் விடுமுறைக்கு பின் நேற்று பள்ளி திறக்கப்பட்டது. அனைத்து மாணவிகளின் பைகளையும் ஆசிரியர்கள் முழுமையாக சோதனை நடத்திய பின்னரே வகுப்பறைக்குள் அனுமதித்தனர்.


Similar posts

Comments are closed.