கள்ளப்படகில் இலங்கை வர முயன்றவர் தமிழகத்தில் கைது

Written by vinni   // October 18, 2013   //

arrestவிசா காலம் முடிந்து, ஓராண்டாக பொலிஸார் கண்ணில் படாமல் தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனுஷ்கோடியில் இருந்து கள்ளப்படகில் இலங்கை செல்ல முயன்ற போது, அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மட்டகளப்பு தாட்டான்குடியை சேர்ந்தவர் சுதாகரன், 33. இவர், 27.3.12ல் சுற்றுலா விசாவில், சென்னை வந்தார். 22.9.12 உடன் விசா முடிந்தது.

இலங்கைக்கு திரும்பி செல்லாமல் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதியில் தலைமறைவாக இருந்து, கூலி வேலை பார்த்து வந்தார்.

கள்ளப்படகில் இலங்கை செல்ல திட்டமிட்டு, நேற்று மாலை, தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரம் கடற்கரைக்கு வந்தார். தகவலறிந்த மண்டபம் கடலோர பாதுகாப்பு பிரிவு பொலிஸார், சுதாகரனை பிடித்து, விசாரித்து வருகின்றனர்.


Similar posts

Comments are closed.