அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ!

Written by vinni   // October 18, 2013   //

wild_fire_002அவுஸ்திரேலியாவில் மிக வேகமாக பரவி வரும் காட்டுத்தீக்கு 1000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகி உள்ளன.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் சுமார் 15 இடங்களில் காட்டுத்தீ பிடித்துள்ளது.

காற்றின் வேகமும் மிக அதிகமாக இருப்பதால் தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிகிறது.

இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள லேக் முன்மோர்க், சிட்னி, புளுமவுன் டெய்ன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடும் புகைமூட்டம் காணப்படுகிறது.

தீயை அணைக்கும் பணியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உடனடியாக அப்பகுதியில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதுடன், 1000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகி உள்ளன.

காட்டு தீயினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் அதன் அருகேயுள்ள சிட்னி நகர மேகங்களில் படிந்துள்ளது.

இதனால் அந்த நகரம் மேக மூட்டத்துடன் காட்சியளிக்கிறது.

காட்டுத் தீயில் சிக்கி 62 வயது முதியவர் பலியானார், தன்னுடைய வீட்டை காக்க முயன்ற போது இந்த கோரச்சம்பவம் நிகழ்ந்தது.


Similar posts

Comments are closed.