500 அகதிகளை பொறுப்பேற்கும் பிரான்ஸ்

Written by vinni   // October 18, 2013   //

Internally displaced Syrian youthsசிரியா நாட்டைச் சேர்ந்த 500 அகதிகளை பிரான்ஸ் நாட்டில் ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டே அறிவித்துள்ளார்.
சிரியா நாட்டில் ஏற்பட்ட ரசாயன தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் புகலிடம் கோரி ஏனைய நாடுகளுக்கு இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கு முன்னதாக 2011ம் ஆண்டு ஏற்பட்ட போரின் போதே 2 மில்லியன் பேர் அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ், ஜேர்மன், ஸ்வீடன், துருக்கி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பிரான்ஸ் நாடானது 500 அகதிகளை பொறுப்பெடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு ஜனாதிபதி பிரான்கோயிஸ் கூறுகையில், ஐக்கிய நாடுகளின் சபையின் கோரிக்கையின் படி எங்கள் நாட்டில் 500 அகதிகளுக்கு தேவையானவற்றை செய்துகொடுக்கிறோம் என கூறியுள்ளார்.

மேலும் 5,000 அகதிகள் ஜேர்மன், ஸ்வீடன் மற்றும் அமெரிக்காவில் புகலிக் கோரிக்கைக்கு விண்ணப்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.