சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சிக்குள் முரண்பாடு

Written by vinni   // October 18, 2013   //

Fonseka speaks to reporters during a news conference in Colomboமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சிக்குள் முரண்பாட்டு நிலமை ஏற்பட்டுள்ளது.

மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

தோல்வியடைந்த வேட்பாளர்கள் வெற்றியீட்டியவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

தமது கட்சியின் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு கோரியுள்ளனர்.

ஜனநாயகக் கட்சிக்கு கண்டி மாவட்டத்தில் இரண்டு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. சீ.ஏ. கலப்பத்தி மற்றும் அசங்க திலகரட்ன ஆகிய இருவருமே இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாவர்.

எனினும், விருப்பு வாக்கு எண்ணப்பட்டு கணனியில் பதிவு செய்யப்பட்ட போது ஏதோ குளறுபடி இடம்பெற்றுள்ளதாக ஏனைய வேட்பாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனவே மீண்டும் தமது கட்சி வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.