ரிமோட் தர மறுத்ததால் உயிரை விட்ட மாணவி

Written by vinni   // October 17, 2013   //

deadகிருஷ்ணகிரி மாவட்டத்தில் தன்னுடைய தங்கை தொலைக்காட்சி ரிமோட்டை தராததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அவரது வீட்டில், தங்கையுடன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு சேனலில் கல்லூரி மாணவிக்குக்கு பிடித்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது, இதனை கண்ட மாணவி தொலைக்காட்சி ரிமோட்டை தன்னிடம் தருமாறு தங்கையிடம் கேட்டுள்ளார்.

தொலைக்காட்சியின் ரிமோட்டை மாணவியின் தங்கை தரவில்லை. இதனால் அவரிடம் வாக்குவாதம் செய்த மாணவி கோபித்துக்கொண்டு அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டார்.

அந்த அறையை விட்டு மாணவி மாலை வரை வெளியே வரவில்லை. இதையடுத்து வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய இவர்களது தாயிடம் மாணவியின் தங்கை நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதையடுத்து மாணவியின் தங்கையும், தாயும் அவரை சமாதானப்படுத்த கதவை தட்டியுள்ளனர், கதவை திறக்காததால் அவர்கள் ஜன்னல் வழியாக மாணவியிடம் பேச முற்பட்டப்போதுதான் அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் மாணவியின் தற்கொலைக்கு சரியான காரணமென்ன என்பது குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Similar posts

Comments are closed.