பயனர்களை கவரும் புதிய வடிவமைப்பில் வெளிவருகின்றது Samsung Galaxy Round (வீடியோ இணைப்பு)

Written by vinni   // October 17, 2013   //

samsung_galaxy_002வேறுபட்ட தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவந்த Samsung நிறுவனம் தற்போது வடிவத்திலும் புதுமையை புகுத்தியுள்ளது.
இதற்கிணங்க Samsung Galaxy Round எனும் வளைந்த தோற்றம் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை உருவாக்கியுள்ளது.

5.7 அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய Super AMOLED தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியில் 2.3GHz வேகம் கொண்ட Processor மற்றும் 3GB RAM ஆகியனவும் காணப்படுகின்றது.

மேலும் கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் தரப்பட்டுள்ளன.

இவற்றின் சேமிப்பு நினைவகமாக 32GB கொள்ளளவு காணப்படுகின்றதுடன் விலையும் ஏறத்தாழ 1,000 டொலர்கள் அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.