கண்ணீர் விட்டு அழுத சோனியா: ராகுலின் உருக்கம்

Written by vinni   // October 17, 2013   //

rahul-gandhi-25409313காங்கிரஸ் தலைவர் சோனியா எந்த அளவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற கவலையை மக்களுடன் பகிர்ந்துகொண்டார் ராகுல் காந்தி.
சட்டசபை தேர்தல் மத்திய பிரதேசத்தில் வருகின்ற நவம்பர் 25ல் நடக்கிறது. இங்கு ராகுல் தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.

சடோலில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல், இங்கு ஆளும் மாநில அரசு எந்தவொரு வளர்ச்சி பணியையும் செய்யவில்லை. மக்களின் முன்னேற்றம் இங்கு இல்லை. காங்கிரஸ் அரசு வந்தால் மக்களின் வாழ்வாதாரம் உயரும்.

காங்கிரஸ் அரசு நாட்டில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அனைவருக்கும் உணவு கிடைக்க வழி வகை செய்யும் உணவு பாதுகாப்பு மசோதா கொண்டு வந்தோம்.

இந்த மசோதா கொண்டு வந்த போது எனது தாயார் சோனியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என நான் வலியுறுத்தினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

விவாதம் முடிந்த பின்னரே மருத்துவமனைக்கு சென்றார். இந்த சட்டத்திற்காக நான் கடுமையாக போராடியிருக்கிறேன் ஆனால் என்னால் ஓட்டு போட முடியாமல் போனதே என்று எனது தாயார் கண்ணீர் விட்டார்.

மேலும் தனது உடல் நலத்தை விட இந்த மசோதா குறித்து அதிகம் கவலைப்பட்டார். காரணம் மக்கள் பட்னி கிடந்தால் வளர்ச்சி பணிகளால் பயன் எதுவும் இல்லை என கருதினார். இந்த சட்டத்தை பா.ஜ.க கொண்டு வரவில்லை. காங்கிரஸ்தான் கொண்டு வந்தது.

நிலம் கையகப்படுத்துதலில் ஆதிவாசி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. இதற்கென மத்திய அரசு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டு வந்துள்ளோம். இது விவசாய மக்களுக்கு நன்மைகள் தரும்.

மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆதிவாசி பெண்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படும் என்றும் ஆதிவாசியை சேர்ந்தவர்கள் லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் எனவும் கூறியுள்ளார்


Similar posts

Comments are closed.