12 வயதுச் சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய புத்த பிக்கு

Written by vinni   // October 17, 2013   //

bhikku-seithy-20120607வவுனியா அட்டமஸ்கடவில் பௌத்த மதகுருவால் நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டு வந்த 12 வயதுடைய சிறுவனொருவன் அப் பகுதியியல் உள்ள பௌத்த விகாரையொன்றின் பௌத்த மதகுருவினால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட் நிலையில் அச் சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா அட்டமஸ்கட பகுதியில் உள்ள விகாரையொன்றின் விகாராதிபதியால் நடத்தப்பட்டு வந்த சிறுவர் இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டு வந்த சிறுவனொருவன் நீண்ட நாட்களாக ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் அச் சிறுவன் சிறுநீர் கழிப்பதற்கு சிரமப்பட்டமையினால் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் அச் சிறுவனுக்கு விகாராதிபதியினால் நீண்ட நாட்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வவுனியா வைத்தியசாலையினால் வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் சிறுவனின் தாயாரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை சம்பந்தப்பட்ட பௌத்த குரு கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேற்படி விடயம் தொடர்பாக தகவல்களை தெரிவிப்பதற்கும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் தயக்கம் காட்டிவருகின்றனர்.

இச் சிறுவர் இல்லத்தில் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளிவந்தபோதிலும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளோ சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரிகளோ பௌத்த மதகுருவிற்குள்ள செல்வாக்கு காரணமாக நடவடிக்கை எடுக்க தயங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.


Similar posts

Comments are closed.