மன்மோகனுக்கு தலையிடிமேல் தலையிடி: ஜெயலலிதாவும் அழுத்தம்!

Written by vinni   // October 17, 2013   //

manmohanஇலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், எனவே தமிழ் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்கப்போவதாக கனடா அறிவித்துள்ளதையும் தனது கடிதத்தில் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இம்மாநாட்டை புறக்கணிப்பதன் மூலம் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் தரலாம் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.