ஜனாதிபதி மஹிந்தவை பொதுநலவாய அமைப்பு தலைவராக்கும் யோசனைக்கு எதிர்ப்பு

Written by vinni   // October 17, 2013   //

human-78rwபொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு மாநாடு நிறைவில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய அமைப்பின் தலைமை தீர்மானிக்கப்படவுள்ளது.

தலைமை பதவிக்க இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் முன்மொழியப்படவுள்ளது.

இந்த நிலையில் இலங்கைக்கு சர்வதேசத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கைக்கு நியூசிலாந்து பசுமைக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அந்த வரிசையில் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கை அமர்வுகளின் நிகழ்ச்சி நிரல் குறித்த இன்றும் நாளையும் லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாடடில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது,

இலங்கைக்கு தலைமைப் பதவி வழங்குவது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளை பாதுகாப்பது தொடர்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தக் குற்றச் செயல்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஓர் நாட்டுக்கு தலைமைப் பதவி வழங்குவது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நன்மதிப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடுமென தெரிவித்துள்ளது.

உரிமை மீறல்களில் ஈடுபடும் நாட்டின் உறுப்புரிமையை ரத்து செய்யும் அதிகாரம் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லாட்சியை ஏற்படுத்தவும் பொதுநலவாய நாடுகள் அமைப்பு கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.