சிவி விக்னேஸ்வரனுக்கு 13 அமைச்சுப் பொறுப்புக்கள்

Written by vinni   // October 17, 2013   //

vikneswaran_001வட மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனுக்கு வட மாகாண சபையில் 13 முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, வட மாகாண சபையின் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் வட மாகாண சபையின் நிதி திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடு மற்றும் கட்டுமாணம், நீர்பாசனம், நுகர்வோர் அபிவிருத்தி, சமூக சேவை மற்றும் புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், தொழில் மற்றும் விவசாய அபிவிருத்தி, சுற்றுலா, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு விநியோக அமைச்சராக இன்று (17) காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த், டளஸ் அழகப்பெரும, அநுர பிரியதர்ஷன யாப்பா, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Similar posts

Comments are closed.