பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்ததில் 4 பேர் பலி

Written by vinni   // October 15, 2013   //

earthquake_graphic_051709_xlargeபிலிப்பைன்ஸ் நாட்டில் சுற்றுலா தலமான சிபு மாகாணத்தில் இன்று காலை 5.43 மணியளவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் போகோல் தீவு கடும் சேதம் அடைந்தது. இங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர். இங்குள்ள கிறிஸ்தவ தேவாலயம், முன்னாள் சிட்டி ஹால் உள்ளிட்ட பல புராதன சின்ன கட்டிடங்களும் இடிந்தன. சிபு அருகேயுள்ள மின்பிடி துறைமுகம் முற்றிலும் சேதம் அடைந்தது.

மாண்டேவு என்ற இடத்தில் மார்க்கெட்டின் கூரை இடிந்து சேதம் அடைந்தது. கட்டிடங்கள் இடிந்ததில் இப்பகுதியில் 19 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு 7.2 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. போகோல் தீவில் கார்மென் நகரில் பூமிக்கு அடியில் 56 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாடு பசிபிக் கடல் பிராந்தியத்தில் நிலநடுக்க அபாய பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.


Similar posts

Comments are closed.