ஐ.நாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க மறுக்கிறது அரசு

Written by vinni   // October 15, 2013   //

srilanka flgஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தாம் பதிலளிக்க முடியாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது பொதுமக்களின் சிறந்த பாதுகாப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஐ.நா. மேற்கொண்டது.
இதற்காக ஐ.நா. முன்வைத்த யோசனைகளை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வில்லை என அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். மோதல்களில் சிக்கிக் கொள்ளாமல் மக்களை வெளியேற அனுமதிக்கும் பொருட்டு மோதல்கள் கட்டாயமாக நிறுத்தப்படக்கூடிய பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்துவது குறித்து சமாதானத்திற்கான இடைவழிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், அந்த நேரத்தில் தாம் வெளியிட்ட அறிக்கைகள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
பர்ஹான் ஹக்கின் மேற்படி கருத்து குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று வினவிய போதே அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஐக்கிய நாடுகள் சபை இதுபோன்ற பல குற்றச்சாட்டுகளை எம்மீது சுமத்திவருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் என்ன அடிப்படையில் எம்மீது சுமத்தப்படுகின்றன எனத் தெரியவில்லை.
எனவே, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எம்மால் பதிலளிக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.