பாலச்சந்திரன் படுகொலை! இலங்கைக்கு எதிரான போலிப் பிரசாரங்களே!- பாதுகாப்பு அமைச்சு

Written by vinni   // October 15, 2013   //

13-balachandran-300இலங்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொலை உள்ளிட்ட பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.

நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சர்வதேச ஊடகங்கள் முயற்சி; பாதுகாப்பு அமைச்சு குற்றச்சாட்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினை குழப்புவதற்காக சர்வதேச ஊடகங்கள் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் கொலை உள்ளிட்ட பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் சர்வதேச அரங்கில் நாட்டுக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் ஏற்படுத்தப்படும் பிரச்சாரங்களே.

எனினும், நிராயுதபாணியான ஒசாமா பின்லேடனை, அமெரிக்க படையினர் ஹெலிகொப்டர் மூலம் சென்று பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தினர். இருப்பினும் இந்தத் தாக்குதல் தொடர்பில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.

மாறாக இலங்கைப் படையினருக்கு எதிராக பல்வேறு வழிகளில் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இவை அனைத்தும் எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலக்கு வைத்து மேற்குலக ஊடகங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரம் எனவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் குற்றம்சாட்டியுள்ளது


Similar posts

Comments are closed.