கூகுள் அறிமுகப்படுத்தும் முதலாவது Android 4.4 KitKat சாதனம்

Written by vinni   // October 15, 2013   //

kitkat_002கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தின் புதிய பதிப்பான Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட முதலாவது சாதனத்தை அறிமுகப்படுத்தவிருக்கின்றது. Google Nexus 5 எனும் பெயருடன் வெளியாகும் இச்சாதனமானது 4.95 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் 2.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியனவும் தரப்பட்டுள்ளன.

இவை தவிர 16GB அல்லது 32GB சேமிப்புக் கொள்ளளவு, 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன.

இவற்றில் 16GB சேமிப்பு கொள்ளளவை கொண்ட சாதனம் 299 டொலர்கள் எனவும் 32GB சேமிப்பு கொள்ளளவைக் கொண்ட சாதனம் 399 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.