சச்சின் ஓய்வு பெறுகிறாரா? ஏமாற்றத்தில் தென் ஆப்ரிக்க ரசிகர்கள்

Written by vinni   // October 14, 2013   //

sachinஇந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவது தங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக தென் ஆப்ரிக்க ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
200-ஆவது டெஸ்டுடன் ஓய்வு பெறவதாக சச்சின் அறிவித்துவிட்டார், இதனால் தென் ஆப்ரிக்க ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

இதுகுறித்து தென்னாப்பிரிக்காவிலுள்ள டர்பன் நகரைச் சேர்ந்த சச்சின் ரசிகர் அனில் ஹர்கோவன் கூறுகையில், சச்சின் ஓய்வு முடிவால் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம்.

தென் ஆப்பிரிக்காவுடன் அவர் டெஸ்ட் விளையாடும்போது நாங்கள் அவரது ஆட்டத்தைப் பார்க்க ஆவலாக இருந்தோம். ஆனால் அது நடைபெறாது என தெரிந்ததால் ஏமாற்றமடைந்துள்ளோம்.

சச்சினுக்கு தென் ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். எங்கள் குடும்பத்தில் 11 பேர் இருக்கிறோம்.

இந்திய அணி டர்பனிலிலுள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் விளையாடும் போதெல்லாம் ஒரு போட்டியைக் கூட நாங்கள் தவறவிட்டதில்லை. இந்திய அணியை ஆதரித்து மைதானத்தில் உற்சாகக் குரல் எழுப்புவோம்.

மற்ற அணிகளுடன் தென்னாப்பிரிக்க அணி விளையாடும்போது, தென் ஆப்பிரிக்க அணி வீரர்களை உற்சாகமூட்டுவோம்.

என்னுடைய 2 மகன்களும் சச்சினின் தீவிர ரசிகர்கள், இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடும்போது விமானத்தில் சென்று அந்த போட்டிகளைப் பார்த்து ரசிப்பர் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு ரசிகர் கார்த்திகேசன் நாயுடு, சச்சினின் ஆட்டத்தைக் காண நாங்கள் மும்பை செல்லவுள்ளோம்.

அனில் ஹர்கோவன் உள்பட 5 பேர் மும்பை செல்கிறோம். இதற்காக டிக்கெட் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

போட்டிக்கான டிக்கெட் கிடைத்ததும் நாங்கள் கண்டிப்பாக மும்பை செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.