காதலியுடன் சென்ற நபர் படுகொலை! வெடித்தது வன்முறை

Written by vinni   // October 14, 2013   //

russia_clash_003ரஷ்யாவில் காதலியுடன் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் யேகோர் ஷெர்பாகோவ்(வயது 25) என்ற வாலிபர் தனது காதலியுடன் சென்று கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையை ககாசூஸ் பகுதியில் இருந்து குடிபெயர்ந்து வந்த தொழிலாளியே செய்திருப்பதாக தகவல் பரவியது.

இதனையடுத்து மாஸ்கோ நகரில் திடீரென வன்முறை வெடித்ததுடன், பிரபல வணிக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கும்பலாக புகுந்து கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

உடனடியாக தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள், 400 பேரை கைது செய்தனர்.

மேலும் வன்முறை மேலும் பரவாமல் தடுக்க பொலிசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன், உள்துறை அமைச்சர் விளாடிமிர் கோலோகோல்த்சேவ் ஆலோசனை நடத்தி வருகின்றார்.


Similar posts

Comments are closed.