மருமகளை நிர்வாணமாக்கி மொட்டையடித்த மாமனார், மாமியார்

Written by vinni   // October 14, 2013   //

arrest_CIமகாராஷ்டிரா மாநிலத்தில் மருமகளை நிர்வாணமாக்கி மொட்டையடித்த மாமனார், மாமியார் மீது பொலிசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் உயர் ஜாதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவரை காதலித்தார்.

இந்நிலையில் யோகேஷின் வீட்டில் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தைத் தொடர்ந்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு அவர்கள் பிவான்டி தாலுகாவில் உள்ள பாலி கிராமத்தில் இருக்கும் அந்த பெண்ணின் பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி அந்த தம்பதினர் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில் யோகேஷின் குடும்பத்தார் அவர்களை வலுக்கட்டாயமாக மைதேவில் உள்ள தங்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்கள் வீட்டு வாசலில் இளம் ஜோடியை கட்டிப்போட்டுள்ளனர்.

பின்பு அந்த பெண்ணை நிர்வாணமாக்கி, தலையை மொட்டயைடித்ததோடு மட்டுமல்லாமல் இதனை யோகேஷின் சகோதரர் ஒருவர் செல்போனில் படம் எடுத்துவைத்து இதை யாரிடமும் கூறக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மைதே கிராமத்து தலைவர் சந்தோஷ் பாட்டில் சம்பவ இடத்திற்கு வந்து இளம் ஜோடியை மீட்டு பாட்கா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அப்பெண் யோகேஷை திருமணம் செய்ததால் தனது மாமனார், மாமியார் நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தியதாக பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

அவரது புகாரின் பேரில் யோகேஷின் பெற்றோர் மதுகர் பாட்டில், மால்டி பாட்டில் மற்றும் அவரின் அண்ணன் ஆகியோர் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar posts

Comments are closed.