ஸ்டாலின் முன்னிலையில் திமுகவினர் மோதல்

Written by vinni   // October 14, 2013   //

stalinசேலம் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வலசையூரில் ஏற்காடு இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் தேர்தல் அறிமுகக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் உள்ள பிரபல ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்து பின்பு அங்கிருந்து கூட்டத்திற்கு கிளம்பிச் சென்றார்.

அவரை வரவேற்க 14வது வார்டில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா தனது ஆதரவாளர்களுடனும், ராஜே்ந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுடனும் வந்திருந்தனர்.

இந்நிலையில் ஸ்டாலினை வரவேற்பதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் இரு தரப்பினரும் அவர் முன்பே அடித்துக் கொண்டனர். இதில் திமுக மண்டல முன்னாள் தலைவர் நடேசன் தாக்கப்பட்டார்.

இதனைப் பார்த்த அதிர்ச்சி அடைந்து அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல் சம்பவம் குறித்து புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றுள்ளனர்.


Similar posts

Comments are closed.