3 மாகாண அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்பு

Written by vinni   // October 14, 2013   //

srilanka flgவட மாகாண சபையின் நான்கு அமைச்சர்களில் மூன்று அமைச்சர்கள் கடமைகளை இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுள்ளனர்.

மாகாண விவசாய மற்றும் கால்நடை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், மாகாண கல்வி மற்றும் கலாசார அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரே அமைச்சு பொறுப்புக்களை பொறுப்பேற்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள மாகாண அமைச்சுகளிலேயே இவர்கள் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர். இந்த நிகழ்வுகளில் அந்தந்த துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


Similar posts

Comments are closed.