இங்கிலாந்தின் மான்செஸ்டர் விமான நிலையத்தை மேம்படுத்தும் முயற்சியில் சீனா

Written by vinni   // October 14, 2013   //

Indira-Gandhi-International-Airport-Delhi-Picture-3சீனா தனது முதலீடுகளை அதிகரித்துள்ள வெளிநாடுகளில் முதல் பத்து இடங்களுக்குள் இங்கிலாந்தும் இடம் பெற்றுள்ளது.
எரிசக்தித்துறை, வங்கி, தேம்ஸ் நீர்வள மேலாண்மை போன்றவற்றில் சீனாவின் முதலீடு உள்ளது. அதுதவிர சில தனியார் நிறுவனங்களிலும் சீனாவின் முதலீடு அதிகரித்துள்ளது.

இதுமட்டுமின்றி லண்டன் நகரிலும் சீன நிறுவனங்கள் பெரிய அளவிலான முதலீடுகளைத் துவக்கியுள்ளன. தற்போது மான்செஸ்டர் விமான நிலையத்தின் வர்த்தக மேம்பாட்டிற்காக 800 மில்லியன் பவுண்டு மதிப்பிலான முதலீட்டினை அளிக்க சீன நிறுவனம் ஒன்று ஒப்புக்கொண்டுள்ளது.

இங்கிலாந்தில் சீனாவின் முதலீட்டை அதிகரிக்கவும், சீன முதலீட்டாளர்களை இங்கிலாந்திற்கு வரும்படி ஊக்கப்படுத்தவும் சீனாவிற்கு செல்லக் கிளம்பியபோது மான்செஸ்டர் நகரின் அதிபரான ஜார்ஜ் ஓஸ்போர்ன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

வளர்ந்துவரும் பொருளாதாரத்துடன் வர்த்தகம் என்ற இங்கிலாந்து அரசின் கோட்பாடு பயனளிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மான்செஸ்டர் விமான நிலையக் குழு, கிரேட் மான்செஸ்டர் பென்ஷன் குழு, கரில்லியன் பிக்சர்ஸ் போன்றவை பீஜிங்கின் கட்டுமான பொறியியல் குழுவுடன் இணைந்து மான்செஸ்டர் விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்த உள்ளன.

பிரிட்டனின் மூன்றாவது பெரிய விமான நிலையமான மான்செஸ்டரில் இதன்மூலம் அலுவலகங்கள், ஹோட்டல்கள், உற்பத்தி நிறுவனங்கள், தகவல் மற்றும் சேமிப்பு மையங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட உள்ளன. லண்டன் நகருக்கு வெளியிலும் அதிகரிக்கப்படும் வர்த்தக முதலீடுகள் இங்கிலாந்து நாட்டிற்கும்,இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் நன்மை அளிக்கக்கூடியவையாக இருக்கும் என்று ஒஸ்போர்ன் குறிப்பிட்டார்.

லண்டன் நகர மேயரான போரிஸ் ஜான்சனும் ஆறு நாட்கள் அரசு முறைப் பயணமாக சீனாவிற்கு செல்ல உள்ளார். அங்கு அவரும் அரசியல் தலைவர்கள், வர்த்தக உயர் அதிகாரிகள் போன்றோரைச் சந்தித்து தலைநகரின் வர்த்தக முதலீட்டு மேம்பாடு குறித்து ஆலோசனை செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.