இத்தாலி புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை கண்காணிக்கும் பணி தீவிரம்

Written by vinni   // October 14, 2013   //

150904-99-aboard-asylum-seeker-boatஇத்தாலி புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை கண்காணிக்கும் பணிகளை திவிரப்படுத்தியுள்ளது. கடல் வழியாகவும் வான் வழியாகவும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அண்மைக்காலமாக புகலிடக் கோரிக்கையாளர் படகு விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வடைந்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்னதாக இடம்பெற்ற படகு விபத்தில் 350 பேரும், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 35 பேரும் கொல்லப்பட்டிருந்தனர்.

கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தி விபத்துக்களை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் படகுகள் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் குறித்து கண்காணிப்பு நடத்தப்பட உள்ளது.


Similar posts

Comments are closed.