தீவிரவாதி பக்ரூதின் தானாக சரணடைந்தாரா?

Written by vinni   // October 13, 2013   //

paktuthin_001தீவிரவாதி பொலிஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டது குறித்து தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இந்து முன்னணி தலைவர் வெள்ளையப்பன், பாஜக தலைவர் ஆடிட்டர் ரமேஷ், வேலூர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, மதுரையில் பால்காரர் சுரேஷ் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலைகளில் தீவிரவாதிகள் பொலிஸ் பக்ருதீன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனால் அவர்களை பிடித்துக் கொடுத்தால் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும் அவர்களை சுட்டுப் பிடிக்கவும் பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதையறிந்த பொலிஸ் பக்ரூதின், அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது கொடுங்கையூரைச் சேர்ந்த காபிபோசா குற்றவாளி சாகுல் அமீது(55) என்பவருடன் நெருங்கி பழகியுள்ளார்.

ஜாமீனில் வெளியில் வந்த சாகுல் அமீது, மீண்டும் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதால் காபிபோசா சட்டத்தில் அவர் மீது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இதனால் 2004ல் துபாய் தப்பிச் சென்ற அவர் அங்கு வசித்து வருகிறார்.

இந்நிலையில் பொலிஸ் பக்ருதீன், சாகுல் அமீது மூலம் தமிழகம் மற்றும் ஆந்திர பொலிசாரை தொடர்பு கொண்டு சரணடைய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தமிழக உளவுப் பிரிவு பொலிசாருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்கள் சாகுல் அமீதுவிடம் பேசியுள்ளனர்.

அப்போது பொலிஸ் பக்ருதீன் பொலிஸ் நிலையத்துக்கோ, அதிகாரிகளின் அறைகளுக்கோ வந்து சரணடைய வேண்டாம் என்றும் பெரியமேட்டுக்கு வரச்சொல்லுங்கள் நாங்களே கைது செய்கிறோம் எனவும் உளவு பிரிவு கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சாகுல் அமீது சொன்னபடி பெரியமேட்டுக்கு வந்த பொலிஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். மேலும் அவரின் தகவலின்படி மற்ற 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த தகவலானது பொலிஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.