வெற்றிகரமாக கரையை கடந்த பைலின் புயல்

Written by vinni   // October 13, 2013   //

Cycloneகடந்த 5 நாட்களாக இந்தியாவை அச்சுறுத்தி வந்த பைலின் புயல் பெரும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படுத்தாமல் நேற்று கரையை கடந்துள்ளது.
பைலின் புயலினால் பெரும் ஆபத்து என்று கடந்த 5 நாட்களாக வானிலை ஆய்வு மையமும் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையமும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் பைலின் புயல் நேற்றிரவு 7.55 மணிக்கு ஒடிசா மாநிலம் கோபால்பூர் பாரதீப் துறைமுகம் இடையே கரையைக் கடந்துள்ளது.

அப்போது 200 முதல் 220 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய காற்றால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தோடு, வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

மேலும் புயல் கரையை கடந்துள்ள போதிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஒடிசா மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்கள் இருளில் முழ்கிக் கிடந்தன. மேலும் கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் பைலின் புயலின் தாக்கம் இன்று வரை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Similar posts

Comments are closed.