வட­கி­ழக்கு இணைந்த தாய­கமே இறு­தித்­தீர்வு! இதனை யாருமே பிரித்துப் பார்க்­கக்­கூ­டாது

Written by vinni   // October 13, 2013   //

Northern_Province-298x212எதிர்­வரும் நவம்பர் 27ம் திக­தியை நெஞ்சில் நிறுத்தி அவர்­களின் கனவை சுமந்­த­வர்­க­ளாக நாம் எமது மண்ணில் தமி­ழர்­க­ளாக வாழக்­கூ­டிய தீர்­வுக்­காக உழைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடாளு­மன்ற உறுப்­பினர் பா.அரி­ய­நேந்­திரன் தெரி­வித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­களின் நேற்­று முன்தினம் நடைபெற்ற பத­வி­யேற்பு வைப­வத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

வட கிழக்கு இணைந்த தாயகம் தான் இறு­தித்­தீர்வு. இதை­யாரும் பிரித்துப் பார்க்­க­வேண்டாம். இலங்கை – இந்­திய ஒந்­தத்தில் கூட வட கிழக்கு இணைந்த தாயகம் தான் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் அண்­மையில் இங்கு வந்து சென்ற இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சல்மான் குர்ஷித் வடக்கைப் பற்றி மட்­டுமே பேசினார்.

கிழக்கைப் பற்றி ஒரு வார்த்தை கூட கதைக்­க­வில்லை. எங்­களை கூறு­போட நினைத்தால் நாம் அதை ஏற்­றுக்­கொள்ள மாட்டோம்.

எனவே நவம்பர் 27ம் திக­தியை நெஞ்சில் நிறுத்தி அவர்­களின் கன­வு­களை நீங்கள் சுமந்­த­வர்­க­ளாக எமது மண்ணில் மீண்டும் தமி­ழர்­க­ளாக வாழக்­கூ­டிய தீர்­வுக்­காக பாடு­பட வேண்டும் என்றார்


Similar posts

Comments are closed.