பேரரசர் குவாங் பயன்படுத்திய பீங்கான் 110 கோடி ரூபாவுக்கு விற்பனை

Written by vinni   // October 13, 2013   //

chinese_ceramic_cup_001சீன பீங்கான் கிண்ணம், ஹாங்காங்கில் உள்ள ஒரு ஏல விற்பனை நிலையத்தில் 110 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது.
19ம் நூற்றாண்டின் சாங்க்வா காலத்தில் சீனாவில், கலை மற்றும் கைத்தொழில் புகழ் பெற்று இருந்தன.

பீங்கானால் செய்யப்பட்ட சிறிய அழகான, இந்த ‘மிங்’ கிண்ணத்தை, அப்போதைய பேரரசர் குவாங் பயன்படுத்தினார்.

ஆசிய கலைப் பொருட்களின் விற்பனைக்குப் பெயர் பெற்ற, ஹாங்காங்கின், சூதேபி ஏல நிறுவனத்தில், நடந்த விற்பனையில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த கலை ஆர்வலர்கள் வந்திருந்தனர்.

இந்த ‘மிங்’ கிண்ணத்தை, ஹாங்காங்கைச் சேர்ந்த, சீன மண்பாண்ட டீலரான வில்லியம் செக் என்பவர் வாங்கியுள்ளதாக இதன் நிறுவனர் நிகோலஸ் சாவூ கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.