அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்த மலாலா

Written by vinni   // October 13, 2013   //

obama_malala_001பாகிஸ்தானின் பாடசாலை மாணவி மலாலா யூசுப் சாய் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் அமெரிக்காவின் முதற் பெண்மணி மிச்செல் ஒபாமா மற்றும் ஒபாமாவின் புதல்வியும் கலந்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெண்களுக்கான கல்வி தொடர்பில் மலாலாவின் முயற்சிகளுக்கு இதன்போது ஒபாமா நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மிச்செல் ஒபாமா, மலாலாவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.