ராமர் கோவில் கட்டுவது தொடர்பில் சர்ச்சை

Written by vinni   // October 13, 2013   //

ayodhi_001உத்தரபிரதேச மாநிலத்தில், அகிலேஷ்யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

மாநில அரசின் உள்துறை செயலார் சரேஷ் சந்திர மிஸ்ரா, பொலிஸ் டி.ஜி.பி.க்கு அயோத்தியில் ராமர் கோவிலை மீண்டும் கட்டுவது தொடர்பாக கடிதம் ஒன்று எழுதி இருந்தார்.

சோம்நாத் கோவிலை கட்டியதைப்போல் அயோத்தி ராமர்ஜென்ம பூமியில் மீண்டும் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக, 14-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்கும்படி அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சர்ச்சையை ஏற்படுத்திய இந்த கடிதம் தொடர்பாக, உ.பி. மாநில அரசு சார்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது. “19-ந்தேதி அன்று விசுவ இந்து பரிஷத் இயக்கம் சார்பில், அயோத்தி பிரச்சினையில் நடைபெற இருக்கும் போராட்டத்தை (சங்கல்ப் திவாஸ்) சமாளிப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக எழுதப்பட்ட இந்த கடிதம், தவறுதலாக அச்சிடப்பட்டுவிட்டது. அந்த தவறு பின்னர் சரி செய்யப்பட்டுவிட்டதாக”, அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

“சர்ச்சைக்குரிய உ.பி. அரசின் இந்த கடிதம், காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சிகளின் கூட்டு சதி” என்று, பா.ஜனதா கட்சியின் தேசிய துணை தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதுபோன்ற சதித்திட்டத்தின் மூலம் அந்த சக்திகளால் 2014-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும், அவர் கூறினார்.

“காங்கிரஸ் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. நரேந்திரமோடியை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகி வருகிறார்கள்” என்று கூறிய அவர், “3-வது அணி என்பது காலாவதியான தேர்தல் சாக்லெட்” என்று வர்ணித்த நக்வி, “காங்கிரசை ஆதரிப்பவர்கள்தான் 3-வது அணி என்ற கருத்தை பரப்பி வருவதாகவும்” குற்றம் சாட்டினார்.


Similar posts

Comments are closed.