பீகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தலை துண்டித்து கொலை

Written by vinni   // October 13, 2013   //

serial-killerபீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டம் கார்கைவாடி கிராமத்தை சேர்ந்த இரு குடும்பத்தினரிடையே நீண்டகாலமாகவே நிலத்தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஒரு குடும்பத்தினர் மிகவும் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் அரிவாளால் மற்றொரு குடும்பத்தினரை வெட்டினர்.

இந்த சண்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகள் என 3 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

செய்தியறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர் என்று கிஷன்கஞ்ச் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.