ஜவ்வாதுமலையில் குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி

Written by vinni   // October 12, 2013   //

images (1)வேலூர் மாவட்டம் வாணியம்பாடி காதர்பேட்டை நியுடெல்லி பகுதியை சேர்ந்தவர் முகைதீன் மகன் சர்புதீன்(வயது20). இர்பான் மகன் மியாஸ்(21), இம்தியாஸ் மகன் சுகியாஸ்(20) மற்றும் அக்பர், சதாம் இவர்களில் சுகியாஸ் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நண்பர்கள் குளிக்க சென்றனர் நண்பர்களான 5 பேரும் நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அதில் தண்ணீர் இல்லாததால் அதில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அடர்ந்த காட்டில் குட்டையாக தேங்கி கிடக்கும் தண்ணீரில் குளிக்க சென்றனர்.

தண்ணீரில் மூழ்கினர் அப்போது நேரம் ஆகிவிட்டதால் செக்போஸ்டில் இருந்த ஊழியர்கள் அவர்களை தடுத்துள்ளனர். எனினும் அவர்கள் அந்த இடத்துக்கு சென்று குளித்துள்ளனர். அவர்களில் அக்பர், சதாம் ஆகிய இருவரும் சிறிது நேரம் குளித்து விட்டு கரைக்கு வந்து விட்டனர்.

ஆனால் சர்புதீன், மியாஸ், சுகியாஸ் ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கி குளித்தனர். வெகுநேரமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை. 3 பேர் சாவு இதனால் பதற்றம் அடைந்த அக்பர், சதாம் ஆகிய இருவரும் சென்று உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேடியபோது அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி சேற்றில் சிக்கி மூச்சித்திணறி இறந்துவிட்டது தெரியவந்தது. 3 பேரின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

இதுகுறித்து வாணியம்பாடியில் இருந்த அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தங்கள் மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர்கள் 3 பேர் இறந்ததால் வாணியம்பாடி காதர்பேட்டை நிïடெல்லி பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.


Similar posts

Comments are closed.