பெட்ரோல் நிரப்பும் அவசரத்தில் புது மனைவியை மறந்த கணவர்

Written by vinni   // October 12, 2013   //

carபெட்ரோல் நிரப்பும் மும்முரத்தில், புது மனைவியை மறந்து, காரை வேகமாக கிளப்பி சென்ற ஜெர்மன் நாட்டவரால் அவரது மனைவி தவிக்க நேர்ந்தது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த புது மண தம்பதியர், பிரான்ஸ் நாட்டில், தேனிலவை கொண்டாடி விட்டு, நேற்று முன்தினம், பெர்லினுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

வழியில், பேட் ஹர்ஸ்பீல்டு என்ற இடத்தில் மணமகன், காரில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து, காரில் தூங்கி கொண்டிருந்த அவரது மனைவி அருகே இருந்த கழிவறைக்கு எழுந்து சென்றார். இதை கவனிக்காத, ஜெர்மானியர், காரை வேகமாக கிளப்பிக்கொண்டு சென்றார்.

காரில் தான் இல்லாததை கண்டு மீண்டும் திரும்பி வருவார் என, எதிர்பார்த்த மனைவி ஏமாற்றமடைந்தார். பொலிஸாருக்கு போன் செய்து, கணவருக்கு தகவல் தெரிவிக்கும் படி கூறினார்.

இரண்டரை மணி பயணத்தில், அந்த கணவர், மனைவியை தேடவில்லை. ஒரு சோதனை சாவடியில், இவரது காரை மறித்த பொலிஸார், “உங்கள் மனைவி நீண்ட நேரமாக, பெட்ரோல் பங்க்கில் காத்திருக்கிறார்’ என, தகவல் தெரிவித்தனர்.

அப்போது தான் பின் இருக்கையை பார்த்தார் அந்த அன்பு கணவர். அதன் பின், மீண்டும், பெட்ரோல் பங்க் சென்று, மனைவியை அழைத்துச் சென்றார்.


Similar posts

Comments are closed.