எதிர்கட்சி உறுப்பினர்களும் சீ.வீ.விக்கினேஸ்வரன் முன்னிலையினில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

Written by vinni   // October 12, 2013   //

Vikneswaran_TNA_Chief_Candidateவடமாகாணசபையின் அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் முன்னிலையினில் சத்தியப்பிரமாணம் செய்ய தீர்மானித்திருப்பதாக கூறப்படுகின்றது. நட்புணர்வை வெளிப்படுத்துமொரு நடவடிக்கையாகவே தமது பதவி பிரமாண நிகழ்வினை அவர்கள் முதல்வர் சீ.வீ.விக்கினேஸ்வரன் முன்னிலையினில் நடத்த தீர்மானித்திருப்பதாக கூறப்படுகின்றது.

முன்னதாக நேற்று கொழும்பில் தமது சத்தியப்பிரமாணத்தை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் அது தடுக்கப்பட்டு முதமைச்சர் முன்னிலையினில் சத்தியப்பிரமாணம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு அங்கத்தவர்களது பதவி பிரமாணச்சர்ச்கை முடிவுக்கு வந்ததும் எதிர்கட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிய வருகின்றது.

இதனிடையே கூட்டமைப்பின் அமைச்சர்கள் நால்வரும் இன்று பிற்பகல் வடக்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி முன்னிலையினில் தமது அமைச்சுப் பதவிகளிற்கான சத்தியப்பிரமாணத்தினை செய்து கொண்டுள்ளனர்.


Similar posts

Comments are closed.