சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் இலங்கையில் முன்னேற்றம் – யுனிசெப்

Written by vinni   // October 12, 2013   //

unசிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணை நிறுவனமான யுனிசெப் தெரிவித்துள்ளது. சிறுவர் நலன்களை மேம்படுத்த உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதி உனா மெக்காலீ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மிகவும் பின்தள்ளப்பட்ட உதவிகள் தேவைப்படுகின்ற சிறுவர் சிறுமியரின் நலன்களை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலேயே யுனிசெப் கூடுதல் கவனம் செலுத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகளில் காத்திரமான பங்களிப்பினை வழங்கத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.