1000 இளைஞர்களுடன் தமிழரசுக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடத் திட்டம்!

Written by vinni   // October 12, 2013   //

TNA-logoவடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பெரு வெற்றியைப் பெற்ற பின்னர், அமைச்சு நியமனம், பதவிப்பிரமாணம் என்பன தொடர்பில் பெரும் குழப்பங்களும் முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாகவே நேற்றைய பதவிப்பிரமாண நிகழ்வை 9 மாகாணசபை உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தார்கள்.

இது தொடர்பாக பிரச்சனைகள் தீர்க்கபட முன் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய மற்றொரு நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினர் தெரிவிக்கின்றனர்.

தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சிவகரன் 1000 இளைஞர்களை ஒன்று திரட்டி யாழ் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தை முற்றிகையிடவுள்ளதாக தெரியவருகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஆயுதக் குழுக்களையும் அக் குழுக்களின் கட்சி சார்ந்தவர்களையும் முழுமையாக கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனக் கோரியே இவ் முற்றுகையை மேற்கொள்ளவுள்ளாக தெரிவிக்கப்படுகிறது.

இவர், இம் முறை இடம்பெற்ற வடமாகாணசபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதுடன், அவருக்கு போனஸ் ஆசனத்தில் உறுப்பினர் பதவி ஒரு வருடத்திற்கு வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் தனக்கு முழுமையாக போனஸ் ஆசனத்தின் மூலம் 5 வருடங்கள் உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் எனக் கோரிவருகின்றார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சிவகரன் தான் அரசியலுக்கு வரமாட்டன் எனவும் அது ஒரு சாக்கடை எனவும் கூறிவந்தமையும் ஆயுதக் குழுவான புலிகளுடன் இணைந்து செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.