220 கி.மீ. வேகத்தில் ஒடிஸாவை நெருங்கும் ‘பாய்லின்’ புயல்’

Written by vinni   // October 12, 2013   //

Cycloneவங்கக் கடலில் உருவான பாய்லின் புயல் 220 கி.மீ வேகத்தில் கடும் சீற்றத்துடன் ஒடிஸா கரையை நோக்கி நெருங்கி வருகிறது.
இந்தப் புயலால் ஆந்திரத்தின் வட பகுதி மற்றும் ஒடிஸாவின் தென் கடலோர பகுதியில் கடும் சேதம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி இந்தப் புயல் ஒடிஸாவின் பாராதீப் மற்றும் கலிங்கப்பட்டினத்தில் இருந்து சுமார் 500 கி.மீ. தூரத்தில் நிலைக்கொண்டிருந்தது.

சுமார் 210 – 220 கி.மீ. மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் சனிக்கிழமை மாலை கலிங்கப்பட்டினம் மற்றும் பாராதீப் ஆகியவற்றுக்கு இடையே உள்ள கோபால்புரம் பகுதியில் கடும் சூறாவளி காற்றுடன் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே சனிக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.