காரிலேயே குழந்தையை மறந்து விட்டு சென்ற பெற்றோர்

Written by vinni   // October 11, 2013   //

Baby-careவிமானத்தை பிடிக்கும் அவசரத்தில் காரில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை மறந்து விட்டு சென்ற பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வாடகை காரில் வந்த தம்பதி ஒருவர், காரில் உள்ள லக்கேஜ்களை அவசரமாக எடுத்துக் கொண்டு விமான நிலையத்துக்குள் சென்றனர்.

கடவுச்சீட்டை எடுத்துக் கொண்டு சோதனைகளுக்கு பிறகு 2வது டெர்மினலை தாண்டி சென்றனர், அங்கே நிறுத்தப்பட்டிருந்த விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.

அப்போது தான் தெரிந்தது, காரிலேயே குழந்தையை விட்டு விட்டு வந்தது, இதற்கிடையே தூங்கி கொண்டிருந்த குழந்தையை டாக்சி டிரைவரும் கவனிக்கவில்லை.

உடனே பதற்றம் அடைந்த தம்பதி, வெளியே வந்து பார்த்த போது டாக்சியை காணவில்லை, இதனையடுத்து விமான நிலையத்தில் உள்ள கமெரா மூலம் தம்பதி வந்த கார் அடையாளம் காணப்பட்டது.

2 மணி நேரத்துக்கு பிறகு அதே கார் மீண்டும் வேறு நபரை ஏற்றி கொண்டு விமான நிலையம் வந்தது.

அப்போது பொலிசார் காரில் சென்று பார்த்த போது குழந்தை காரின் பின் இருக்கையில் நன்றாக தூங்கி கொண்டிருந்தது. பின்னர் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் பொலிசார் ஒப்படைத்தனர்.


Similar posts

Comments are closed.