வெறி பிடித்த நிஜ ரத்தக்காட்டேரி! மகளை கடித்துக்குதறி ரத்தத்தை சுவைத்த தந்தை

Written by vinni   // October 11, 2013   //

bloodஇதுவரையிலும் சினிமாவில் மட்டுமே ரத்தக்காட்டேரியை பார்த்து வந்த நிலையில், அவுஸ்திரேலியாவில் நிஜ சம்பவம் ஒன்றே அரங்கேறியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பப்புவா நியூகினியாவில் நபர் ஒருவர் வசித்து வந்தார்.

இவரை பார்க்க இவரது மனைவியும், மூன்று வயது குழந்தையும் வந்துள்ளனர்.

அப்போது அந்நபர் மகளை தூக்கி கொண்டு அருகில் இருந்த புதருக்குள் ஓடினார்.

பின், மகளின் கழுத்தை கடித்து சதையை உண்டதுடன், ரத்தத்தை குடித்தார்.

இதை பார்த்த அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், அலாரத்தை அடித்தனர்.

ஆனால் அவர்களை பார்த்து பயங்கரமாக சிரித்த அந்த நபர், தனது கொடிய செயலை தொடர்ந்தார்.

அலாரத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சிறுமியின் உடலை புதரில் மறைத்துவிட்டு தப்ப முயன்றார்.

இதற்கிடையே தக்க நேரத்தில் வந்த பொலிசார் அரக்கனை கைது செய்தனர்.

கடந்த ஆண்டுகளில் மட்டும் அவுஸ்திரேலியாவில் நரமாமிசம் உண்ணும் பத்துக்கும் மேற்பட்டோரை பொலிசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.