ஓரினச் சேர்க்கைக்கு வரமறுத்த மாணவன் படுகொலை

Written by vinni   // October 11, 2013   //

Tamil-Daily-News-Paper_77790033818தமிழ்நாட்டில் ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த மாணவனை சக மாணவன் ஒருவன் கழிவுநீர்த் தொட்டியில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி சாலை கொண்டம்மன் சாலையைச் சேர்ந்த கருணாகரன், பரிமளாதேவி தம்பதியினரின் மகன் ஹரிபிரசாத்(வயது 11).

இவன் திண்டுக்கல் அருகேயுள்ள ம.மு.கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் கடந்த 7ம் திகதி காலை விடுதி மாணவர்களுடன் வெளியே சென்ற இவன் பின்னர் விடுதிக்கு திரும்பி வரவில்லை.

இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பள்ளிக்கூட விடுதியின் கழிப்பறை அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் ஹரிபிரசாத்தின் உடலை கண்டுபிடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மாணவன் ஹரிபிரசாத்தின் நெருங்கிய நண்பர்களிடமும், மற்றும் அவன் காணாமல் போன அன்று யாருடன் கடைசியாக வெளியே சென்றான் என பொலிசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பள்ளியில் படித்து வரும் மற்றொரு மாணவனே, ஹரிபிரசாத்தை கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் குறித்து பொலிஸ் தரப்பில் கூறுகையில், விடுதியில் தங்கி படித்து வந்த ஹரிபிரசாத்திற்கு நண்பர்கள் சிலர் இருந்தனர். அதில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரும் உண்டு.

இவர் திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். அந்த 10ம் வகுப்பு மாணவர், ஹரிபிரசாத்தை கட்டாயப்படுத்தி அடிக்கடி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஓரினச் சேர்க்கைக்கு ஹரிபிரசாத் எதிர்ப்பு தெரிவிக்க மறுப்பு தெரிவித்ததோடு, ஆசிரியரிடம் சொல்லி விடுவேன் என்று கூறியுள்ளான்.

இதனால் பயந்து போன 10ம் வகுப்பு மாணவர் நைசாக பேசி ஹரிபிரசாத்தை தனியாக அழைத்து சென்று கழிவுநீர் தொட்டிக்குள் ஹரிபிரசாத்தை தள்ளிவிட்டு மூடியால் தொட்டியை மூடிவிட்டு சென்று விட்டார்.

தொட்டிக்குள் விழுந்த ஹரிபிரசாத் கழிவுநீரில் மூழ்கி இறந்துள்ளான் என்று பொலிசார் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


Similar posts

Comments are closed.