அமோக விற்பனையில் கள்ளச்சாராயம்

Written by vinni   // October 11, 2013   //

kதமிழ்நாட்டிலேயே விழுப்புரம் மாவட்டத்தில் தான் கள்ளச்சாராயம் அமோகமாக விற்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக அமைச்சர் மோகனின் தொகுதி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம்.

இந்த தொகுதியில்தான் கள்ளச்சாராயம் அதிகம் புழங்கும் கல்வராயன்மலை உள்ளது.

இங்கு ஒரு பாக்கெட் சாராயத்தின் விலை 20 முதல் 25 ரூபாய்தான் என்பதால் சாதாரண குடிமகன்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.

இந்த பாக்கெட் சாராயத்திற்கு முனை கடிச்சான், மூட்டை கடிச்சான் என்று குடிமகன்கள் பெயர் வைத்துள்ளனர்.

அதாவது இந்த சாராய கவர் பேக்கிங் செய்யப்பட்டிருக்காது. பாலிதீன் கவரில் ஊற்றி முடிச்சு போடப்பட்டிருக்கும்.

இந்த தொகுதியில் தண்ணீரின்றி பொதுமக்கள் ஒருபக்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர், ஆனால் மறுபக்கமோ கள்ளச்சாரய தண்ணீர் தாராளமாக கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Similar posts

Comments are closed.