ராகுல் காந்தி இந்திய பிரதமர் ஆவார் – ராஜீவை தாக்கிய முன்னார் இலங்கை வீரர் தெரிவிப்பு

Written by vinni   // October 11, 2013   //

Rahul-Gandhi1இந்தியாவில் பிரதமராகுவதற்கு ராகுல் காந்திக்கு சகல தகுதிகளும் இருப்பதாக இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கிய இலங்கை கடற்படையின் முன்னாள் வீரர் விஜித ரோஹண விஜிதமுனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1987 ஆம் ஆண்டு இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கிய இலங்கைச் சிப்பாய் தற்போது ஜோதிடராகவும், இசைக் குறுந்தகடுகளை விற்பவராகவும் தொழில் புரிந்து வருகிறார்.

கொழும்பு அருகில் உள்ள சூப்பர்மார்க்கெட் ஒன்றில் இரண்டு கணினிகளுக்கு முன் அமர்ந்து, சுற்றிலும் இசைத் தட்டுகள் அடுக்கப் பட்டுள்ள நிலையில் தாடியுடன் காணப் படும் அவரைப் பார்ப்பவர்கள் அவர் சில ஆண்டுகளுக்கு முன் ராஜீவைத் தாக்க முற்பட்டார் என்பதை அறிந்தால் நம்ப மாட்டார்கள்.

தற்போது 46 வயதான முன்னாள் கடற்படை சிப்பாயான விஜித ரோஹண விஜிதமுனி, முன்னாள் கடற்படை சிப்பாய் ஆவார்.
கடந்த 1987 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை – இந்திய உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக இலங்கை சென்றிருந்தார். அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட கடற்படை அணி வகுப்பு மரியாதையில் அணி வகுத்து நின்றவர்களின் விஜேமுனி ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கினார்.

இதனையடுத்து 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட விஜேமுனி, மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பின்னர் விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தற்போது ஜோதிடராகவும், மியூசிக் சிடி விற்பவராகவும் தொழில் புரிந்து வருகிறார்.இவரது கடையில் புத்த மதப் பாடல்கள் தொகுப்பும், சிங்களப் படப்பாடல்கள் தொகுப்பும், சில ஹிந்திப் பட பாடல்களும் உள்ளன. ராஜீவைத் தாக்கிய சம்பவம் குறித்து அவரிடம் இந்தியப் பத்திரிக்கை ஒன்று பேட்டி கேட்டது. ஆனால், அதற்குக்கு வாய் திறக்க மறுத்து விட்ட விஜேமுனி, ராஜபக்சே குறித்து மட்டும் ஊடகத்திற்கு ஜோதிடம் கூற சம்மதித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ‘அடுத்த தேர்தலில் ராஜபக்சே தோல்வியைத் தழுவுவார்’ என்றார்.

மேலும், இந்திய அரசிய அரசியலையும் தான் கவனித்து வருவதாகவும், வரும் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடிக்கும் எனவும் ஜோதிடம் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த விஜேமுனி,’ ராகுல் நிசயம் பிரதமராவார். ஆனால், இப்போதல்ல, இதற்கும் அடுத்தத் தேர்தலில்.’எனக் கூறியுள்ளார். ராகுலுக்கு தீர்க்காயுசு எனவும் தனது ஜோதிட திறமை மூலம் கணித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் இவர்.

மேலும், மற்றொரு சிங்கள் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் விஜேமுனி, ‘தான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல என்றும் இலங்கையின் வான் பரப்பில் அத்து மீறி, பறந்து நாட்டை ஆக்கிரமித்த ராஜீவ் காந்தி பலாத்காரமாக இந்திய – இலங்கை உடன்படிக்கையை மேற்கொண்டு நாட்டைப் பிரிக்கும் 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் இலங்கை அரசியலமைப்புக்குள் புகுத்தியதாலேயே அவரை தாக்கியதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.