இறுதிப்போர் காலத்தில் வன்னி மக்களை பாதுகாப்பதில் இருந்து ஐக்கிய நாடுகள் தவறிவிட்டது

Written by vinni   // October 11, 2013   //

Flag-of-the-United-Nationsஇலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது கடமைகளில் இருந்து தோல்வி கண்டமை குறித்த ஆராய்வு அறிக்கை விரைவில் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனை ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஜோன் ஹிட்டிங் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போர் காலத்தில் வன்னி மக்களை பாதுகாப்பதில் இருந்து ஐக்கிய நாடுகள் தவறிவிட்டது என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் ஜோன் பெற்றி என்பவர் விசாரணைகளை நடத்தி ஐக்கிய நாடுகளின் தோல்வியை உறுதி செய்தார்.

இதனையடுத்து பான் கீ மூன் தமது மன்னிப்பையும் கோரியிருந்தார். இந்தநிலையிலேயே ஜோன் பெற்றியின் அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.


Similar posts

Comments are closed.