கனடாவில் 7–வது காமன்வெல்த் கராத்தே சாம்பியன் போட்டி

Written by vinni   // October 10, 2013   //

749e288d-1a06-4df6-a032-38a932f3ea19_S_secvpf7–வது காமன்வெல்த் கராத்தே சாம்பியன் போட்டி கனடாவில் உள்ள மாண்ட்ரியல் நகரில் நாளை (11–ந்தேதி) முதல் வருகிற 13–ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்தப்போட்டியில் 22 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.

கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் தலைமையில் இந்திய அணி இந்தப்போட்டியில் விளையாடுகிறது. பொதுச் செயலாளர் பரத்சர்மா அணியின் ஷெப்–டி– மிஷனாக கலந்து கொள்கிறார்.

காமன்வெல்த் கராத்தே போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர், வீராங்கனை வருமாறு:–

தேவன்குமார் மொகந்தி, தீபிகா திமன், அங்கீத் குப்தா, பிரிக்வால் கவுசல், பிரணாய் சர்மா (புதுடெல்லி), சுனுபிரியா பாட்டியா (உத்தரகாண்ட்), நிவேதிதா சிங், யாமினி சிங் (ராஜஸ்தான்).

விஷால்சிங், ஷிகில்சிங் (காஷ்மீர்), ராகுல், அனில்குமார் (அரியானா), நோபின் (அருணாச்சல பிரதேசம்), சம்தியா, சுப்ரியா அமர்சிங் (மத்திய பிரதேசம்) கார்ல் வட்சா, சரோஷ் கூப்பர் (மும்பை).


Similar posts

Comments are closed.