அனைத்து வழக்குகளில் இருந்தும் முஷாரப்புக்கு ஜாமின்

Written by vinni   // October 10, 2013   //

musharaf-slider-150x125பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்புக்கு அனைத்து வழக்குகளில் இருந்தும் ஜாமின் கிடைத்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கடந்த 2008ம் ஆண்டில் தேர்தல் பிரசாரத்தின் போது தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார்.

அப்போது ஜனாதிபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப் தான் இதற்கு காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் முஷாரப் இடைக்கால ஜாமின் பெற்றிருந்தார்.

மேலும் கடந்த 2007ம் ஆண்டில் அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்ததன் மூலம் 60 நீதிபதிகளை சிறையில் அடைத்தார்.

அரசியலமைப்பு சட்டத்தை மீறியதாக அவர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலும் அவருக்கு முன்னதாக ஜாமின் கிடைத்துள்ளது.

பலூசிஸ்தான் தலைவர் பக்டிக்கு எதிராக முஷாரப் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதில் அவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக முஷாரப் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் முஷராப்புக்கு நேற்று ஜாமின் வழங்கியது. 10 லட்ச ரூபாய் ரொக்க ஜாமின் செலுத்தியதையடுத்து வீட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

இருப்பினும் அவர் வெளிநாடு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.