25 மாவட்டங்களில் நாளை அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை

Written by vinni   // October 10, 2013   //

Tsunami2நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் நாளைய தினம் (11) சுனாமி, மண்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு இடம்பெறும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அனர்த்தக் குறைப்பு தினத்தை முன்னிட்டு இந்த முன்னெச்சரிக்கை ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நாளை (11) வெள்ள அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வு ஊட்டும் நிகழ்வு அநுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, மொனராகலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் முற்பகல் 11 மணியிலிருந்து 12 மணிவரை முன்னெடுக்கப்படும்.

மண்சரிவு அனர்த்த ஒத்திகை இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, கேகாலை, மாத்தளை, கண்டி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2 மணியிலிருந்து 3 மணிவரை முன்னெடுக்கப்படும்.

சுனாமி ஒத்திகை அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணிவரை முன்னெடுக்கப்படும்.

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்தினையின் போது ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவு மணிக்கோபுரம், திவினுவர மீன்பிடி துறைமுக மணிக்கோபுரம், முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் மணிக்கோபுரம் என்பவற்றில் ஒலி எழுப்பப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.