ஒரு வயது குழந்தையை நாசம் செய்த இளம் பெண்: பெற்றோர்கள் அதிர்ச்சி

Written by vinni   // October 10, 2013   //

woman_001அமெரிக்காவில் ஒரு வயது ஆண் குழந்தையிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்ட 25 வயது பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓஹையோவில் டே கேர் மையத்தின் பொறுப்பாளரான ஹீதர் கூன் என்ற 25 வயதுப் பெண், தனது மையத்தில் சேர்க்கப்பட்ட ஆண் குழந்தைகளிடம் பாலியல் சேஷ்டைகளில் ஈடுபட்டு அதை வீடியோவிலும் படமாக்கியுள்ளார்.

இந்தப் பெண் மீது 2 பாலியல் பலாத்கார வழக்கைப் பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

மேலும் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டதை தனது வீடியோவில் அவர் பதிவு செய்து வைத்திருந்ததை அந்தப் பெண்ணின் லேப்டாப்பிலிருந்தும் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த வீடியோவில் ஒரு குழந்தையிடம் அவர் பாலியல் அசிங்கத்தில் ஈடுபட்ட காட்சி முழுமையாக பதிவாகியுள்ளதாம்.

இந்தப் பெண்ணுக்கு இத்தனைக்கும் ஒரு காதலனும் உண்டு. அந்தக் காதலரின் பெயர் ஜேம்ஸ் ஆஸ்போர்ன்.

இருவரும் சேர்ந்துதான் வசித்து வருகின்றனர். அப்படி இருந்தும் பெற்றோர்களால் தனது மையத்தில் விடப்படும் சிறார்களை சீரழித்துள்ளார்.

இதில் கொடுமை என்னவென்றால் இவரது காதலர் ஆஸ்போர்னும் ஒரு பாலியல் விவகாரத்தில் சிக்கிக் கைதானவார்.

தற்போது அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சீரழிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 1 மற்றும் 2 வயதுதான் ஆகிறது என்பது அதிர்ச்சித் தகவலாக உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


Similar posts

Comments are closed.